டொனால்டு டிரம்ப் விமர்சனத்துக்கு ஹில்லாரி பதிலடி

தன் மீதான டொனால்டு டிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹில்லாரி கிளின்டன் அளித்துள்ள பதிலில், பெரும்பான்மை மக்களை டிரம்ப் புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

படத்தின் காப்புரிமை AP

டிரம்ப் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது, அவர் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு ட்விட்டர் தளத்தில் பதிலடிகளை அனுப்பியவாறு இருந்தார் ஹில்லாரி. அவர் தனது எதிர் அணி தலைவர் பல திட்டங்களை முன்வைக்கிறார் என்றும் அவை பெண்கள், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், இஸ்லாமியர்கள், இலத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் குடியேறிகள் போன்றவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.

மெக்சிகோவுடனான அமெரிக்காவின் தென் எல்லையைச் சுற்றி சுவர் கட்டுவது என்ற டிரம்ப்பின் உறுதியான முக்கிய திட்டத்தை அவர் கேலி செய்தார். ஸ்பானிஷ் மொழியில் குறிப்பிட்டுள்ள அவர், தனக்கும் அதிபர் பதவிக்கும் இடையே டிரம்ப் ஒரு சுவர் கட்டவுள்ளதாகக் கூறியுள்ளார்.