ஆஃப்ரிக்காவில் தேனீக்களை வேட்டையாடும் மனிதர்களுக்கு உதவும் பறவையினம்

படத்தின் காப்புரிமை tim laman npl

ஆஃப்ரிக்காவின் துணை சஹாரா நிலப்பரப்பில் தேனீக்களை வேட்டையாடும் மனிதர்களுக்கும், பறவை இனத்தை சேர்ந்த ஒரு வகை உயிரினத்துக்கும் இடையே உள்ள நன்கு ஆவணப்படுத்தப்பட்ட தொடர்பு ஓர் இரு வழி உரையாடல் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த பறவை இனத்தை தேனி வழிகாட்டி என்கிறார்கள்.

இந்த பறவைகளின் கீச்சிடும் சத்தங்கள் மூலம், மனிதர்களை தேன் கூடுகளுக்கு வழிகாட்டுவதாக ஏற்கனவே புரிந்து கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், அறிவியல் நாளேடுகளில் சொல்லப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளின்படி, இந்த பறவைகளை கவர்ந்து இழுக்கும் தனித்துவமான அழைப்பு ஒலியை வேட்டைகாரர்கள் எழுப்புகிறார்கள். அதன் மூலம், அவர்களுக்கு பறவையின் உதவி கிடைக்கிறது.

இந்த சத்தங்கள் அந்த பறவை இனத்தை திறன்மிக்க வேட்டை கூட்டாளிகளாக மாற்றியுள்ளதாக ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.