நீஸ் தாக்குதல்தாரிக்கு உடந்தையாக இருந்ததாக 5 பேர் மீது குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை AP

கடந்த வாரம் நீஸ் நகரில் 80 பேரை லாரி ஏற்றிக் கொன்ற துனீசிய நபருக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிரஞ்சு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் புரிந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பாரீஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது, சிறைக்காவலில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

முன்னர், நீஸ் தாக்குதல் கொலையாளி மொஹமது லுஹ்வாஸ் ஃபூலெலின் தொலைப்பேசி பதிவுகள், சக சதிகாரர்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் நபர்களிடம் அவர் வழக்கமான தொடர்பில் இருந்ததாகவும், பல மாதங்களாக தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சில தகவல்களில் தங்களை அல்லாவின் படையினராக அடையாளம் காட்டிக் கொண்டுள்ளனர்.

மேலும், பிரஞ்சு பத்திரிகை சார்லி ஹெப்டோ மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு மறைமுக ஆதரவை தெரிவித்திருந்தனர்.