பாகிஸ்தான் அழகி கன்டீல் பலோச் கொலை விவகாரத்தில் மேலும் இருவர் கைது

ஒரு வாரத்துக்கு முன் கொலைசெய்யப்பட்ட பாகிஸ்தானின் இணையதள பிரபலமான மாடல் அழகி கன்டீல் பலோச் விவகாரத்தில் காவல் துறையினர் மேலும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை qandeelbaloch

அவரது சகோதரர், கன்டீல் பலோச் கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்ட பிறகு, அவர் கைது செய்யப்பட்டார்.

முல்தானில் அவரை சம்பவ இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்ற நபர் ஒருவரும், அவரது உறவினர் ஒருவரும் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்டீல் பலோச்சின் உறவு பெண்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.