தாய்லாந்தில் வாக்குச் சீட்டுக்களை சேதப்படுத்தியாக 2 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு

தாய்லாந்தில் எட்டு வயதுள்ள இரண்டு சிறுமிகள், அரசியல் சாசன வரைவு மீதான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான வாக்குச் சீட்டுக்களை சேதப்படுதியாக குற்றஞ்சாட்டப்பபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆவணப்படம்

அந்த பெண்கள் விளையாட்டுத்தனமாக தாள்களை கிழித்து எரிந்ததாக காவல் துறை செய்திகள் தெரிவிக்கின்றன. செய்தியாளர்கள் கூறுகையில், ஆகஸ்ட் மாதம் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பற்றிய விவாதம் ஒடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவர்களின் எதிர்கருத்துக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

கடந்த வாரம் ஒரு வழக்கறிஞர், அரசியல் சாசன வரைவு மீதான வாக்கெடுப்பு நாட்டை சூறையாடும் செயல் என்று விவரித்தார். ராணுவத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் சாசன வரைவு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் திறன்களை வலுவிழக்கசெய்யும்.