ஜெர்மனி: ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

ஒன்பது பேர் கொல்லப்பட்ட ம்யூனிக் வணிக வளாகத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.

படத்தின் காப்புரிமை AP

தாக்குதல் நடத்திய 18 வயதான இரானிய - ஜெர்மனி துப்பாக்கிதாரி, தன்னை தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது என காவல்துறை தெரிவிக்கிறது.

இந்த அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆப்ஸ் மலைத்தொடருக்கு செல்லும் தன்னுடைய விடுமுறை பயணத்தை மெர்கல் ஒரு நாள் தாமதப்படுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை REUTERS

அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ஒன்றை இடைநிறுத்திவிட்டு ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் தெ மெய்சியார் நாடு திரும்பியுள்ளார்.

இந்த கொலைகளை இரான் கண்டித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA

தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் சர்வதேச அளவில் ஒருமித்தக் கருத்தை உருவாக்க வெளிநாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.