ம்யூனிக் தாக்குதல்: ஐ.எஸ்ஸுக்கு தொடர்பில்லை என போலிஸ் தகவல்

படத்தின் காப்புரிமை Reuters

ஜெர்மன் நகரான ம்யூனிக்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒன்பது பேரை கொன்ற நபருக்கும், இஸ்லாமிய அரசு என்று அழைத்து கொள்ளும் அமைப்பினருக்கும் தொடர்பில்லை என போலிஸ் தெரிவித்துள்ளது.

ம்யூனிக் நகரில் பிறந்து வளர்ந்த 18 வயதான அந்த துப்பாக்கித்தாரி ஜெர்மன் மற்றும் இரானிய கடவுச்சீட்டுகளை வைத்துள்ளார் என போலிசார் கூறியுள்ளனர்.

துப்பாக்கிதாரியின் அடுக்குமாடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெறி கொண்ட தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததற்கான வெளிப்பாடுகளை கண்டறிந்துள்ளனர்.

மேலும், அவர் மனநல ஆலோசனை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதலானது, கொலை வெறியாட்டம் என்பதை நிரூபிக்கும் தனித்துவங்கள் உள்ளதாகவும், ஆனால் தீவிரவாதத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தன்னைத்தானே சுட்டுக் கொன்றதாக நம்பப்படும் துப்பாக்கித்தாரி எந்த தற்கொலை குறிப்பையும்வைக்கவில்லை.