பெருநாட்டின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ பியூஜிமோரியை விடுதலை செய்யக் கோரி அணிவகுப்பு

சிறையில் உள்ள நாட்டின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ பியூஜிமோரியை விடுதலை செய்யக் கோரி, நூற்றுகணக்கான மக்கள் பெரு நாட்டின் தலைநகரான லிமாவின் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

அடுத்த வாரம் 78 வயதை நிறைவு செய்யும் பியூஜிமோரி 2007-ம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் வழக்கில் 25 ஆண்டு சிறைவாசத்தை அவர் அனுபவித்து வருகிறார்.

1990களில் சர்வாதிகார ஆட்சியைக் காட்டிலும் அவர் கொரில்லா படைகளை கொண்ட ஷைனிங் பாத்' என்ற அமைப்பின் கிளர்ச்சியை அகற்றினார் மற்றும் பொருளாதார மந்த நிலையை முடிவுக்கு கொண்டுவந்தார்.