பலூனில் தனியாக உலகை சுற்றி வந்த ரஷ்ய சாகஸக்காரர்

ரஷ்ய சாகஸக்காரர் ஃபெடோர் கோணியோகோவ் சூடான காற்று அடைக்கப்பட்ட பலூனில் தனியாக உலகை சுற்றி வந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அவர் பத்திரமாக மேற்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

அவர் 11 நாட்கள், 6 மணிநேரத்தில் பயணத்தை முடித்தார் என்று அவரது அணியினர் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty

உலக காற்று விளையாட்டுகள் கூட்டமைப்பால் உறுதி செய்யப்பட்டால், கோணியோகோவ் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் பாசிட் 2002ல் நிகழ்த்திய சாதனையை முறியடிப்பார்.

படத்தின் காப்புரிமை Getty

ஸ்டீவ் பாசிடை விட இரண்டு நாட்கள் குறைவாக பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அவரது பயணத்தின் போது அவர் சோர்வாகவும், உறைய வைக்கும் குளிரிலும் சிரமப்பட்டர்.