பொருளாதாரத்தில் ஸ்திரமற்ற நிலை: ஜி20 மாநாட்டில் எச்சரிக்கை

ஜி20 நிதியமைச்சர்கள் மாநாடு, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்தமையால் உலக பொருளாதாரத்தில் புதிய ஆபத்துக்களையும், ஸ்திரமற்ற நிலையையும் புகுத்தியுள்ளது என்ற எச்சரிக்கையுடன் சீனாவில் நிறைவடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

பிரிட்டனின் வெளியேற்றம் குறித்து பேசுவது எரிச்சலூட்டும் பேச்சாக மாறும் ஆபத்து இருந்ததாக ஜி20 மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதன் விளைவுகளை சரியான முறையில் எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருந்தது என்றும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருங்கிய கூட்டாளியாக தொடர்ந்து இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

செப்டம்பரில் நடக்கவுள்ள ஜி20 சம்மேளனத்திற்கான வரைவு திட்டங்களை தயாரிக்கும் அமைச்சர்கள், உலக பொருளாதாரத்தை மேலும் கடினமாக்கும் மற்ற காரணிகளான சர்வதேச குழப்பங்கள், தீவிரவாதம், அதிகரிக்கும் அகதிகள் பிரச்சனை ஆகியவற்றை மேற்கொள் காட்ட உள்ளனர்.

மேலும் இம்மாநாட்டில் பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்கு இடையிலும் விரிவாக பகிரப்பட வேண்டும் என்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.