ஜெர்மனி: துப்பாக்கி விற்பனையில் கடும் கட்டுபாடுகளை கொண்டுவர கோரிக்கை

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ம்யூனிக் துப்பாக்கி தாக்குதல், துப்பாக்கி விற்பனையில் கடும் கட்டுபாடுகளை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ம்யூனிக் துப்பாக்கி சூட்டு தாக்குதலை அடுத்து, துப்பாக்கிகள் விற்பனையில் கடும் கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டுமென மூத்த ஜெர்மனி அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆட்களை கொல்லுகின்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு சாதகமான அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று ஜெர்மனியின் துணை சான்சலர் சிக்மார் கேப்ரியல் கூறியிருக்கிறார்.

தாக்குதல் நடத்திய 18 வயதான அலி டேவிட்சன்பொலி, தன்னை தானே அழித்துகொள்வதற்கு முன்னால், ஒன்பது பேரை சுட்டு கொன்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

அவர் ஒரு ஜிலாக் துப்பாக்கியையும். 300-க்கும் அதிகமாக குண்டுகளையும் வைத்திருந்தார்.

துப்பாக்கி சட்டங்களை மீளாய்வு செய்யப் போவதாக அந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் த மைசியர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோர் நினைவாக இன்று ம்யூனிக்கில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.