உலகை சுற்றிவரும் கடைசி நிலையில் சோலார் இம்பல்ஸ்

படத்தின் காப்புரிமை EPA

உலகை சுற்றிவரும் கடைசி நிலையாக, சூரிய சக்தியால் இயங்குகின்ற விமானம் ஒன்று கெய்ரோவிலிருந்து அபுதாபிக்கு பயணத்தை தொடங்கியுள்ளது.

சோலார் இம்பல்ஸ் 2 எனப்படும் இந்த விமானம், கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகை சுற்றிவரும் பயணத்தை தொடங்கியது.

படத்தின் காப்புரிமை Solar Impulse

தற்போதைய 2500 கிலோ மீட்டருக்கு அதிகமான இந்த கடைசி பணயத்தை ஏறக்குறைய 48 மணிநேரத்திற்குள் முடித்து விடலாம் என்று விமானி பெர்டிரான்டு பிக்காடு எதிர்பார்க்கின்றார்.

உயர் தட்பவெப்ப நிலையை சமாளித்து இலக்கை எட்டிவிட்டால் சூரிய சக்தியால் இயக்கப்படும் விமானம் உலகை சுற்றி வருவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

இந்த நெடுந்தூர பயணத்தில் துணை விமானி அன்டிரி போர்ஸ்க்பர்க்-உடன் இணைந்து பிக்காடு இந்த விமானத்தை இயக்கி வருகிறார்.