"ஃப்ளோரிடா தாக்குதல் ஒரு தீவிரவாத செயல் அல்ல"

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இரவு விடுதி ஒன்றிற்கு வெளியே நடந்த தாக்குதல், ஒரு தீவிர வாத செயல் அல்ல என அமெரிக்க போலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஃபோர்ட் மையர்ஸ் நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 14 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதுவரை போலிஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதலின் நோக்கத்தை கண்டறிய முயற்சித்து வருவதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒர்லாண்டோ இரவு விடுதியில் தாக்குதல் நடந்து 49 பேர் கொல்லப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு இம்மாதிரியான ஒரு தாக்குதல் நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.