ஊழல் குற்றச்சாட்டு: ஜெர்மன் முன்னாள் கால்பந்தாட்ட தலைவருக்கு ஒரு வருடம் தடை

படத்தின் காப்புரிமை Getty

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜெர்மன் முன்னாள் கால்பந்தாட்ட தலைவர் உல்ஃப் கேங் நீர்ஸ்பெக், கால்பந்தாட்டத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஜெர்மனிக்கு வழங்கப்பட்டது தொடர்பாக நடந்திருக்கக்கூடிய சீர்கேடுகளை தெரிவிக்கத் தவறிவிட்டார் என்று உலக கால்பந்து நிர்வாக அமைப்பான ஃபிஃபாவின் நெறிப்படுத்தல் குழு தெரிவித்துள்ளது.

ஃபிஃபா செயற்குழுவின் உறுப்பினராக இருந்த நீர்ஸ் பெக், ஜெர்மனியில் உலகக்கோப்பை நடத்த அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியது தொடர்பாக சுமார் 7 மில்லியன் டாலர் பணத்தை ஃபிஃபாவிற்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜெர்மன் கால்பந்து சங்கத்திலிருந்து பதவி விலகினார் நீர்ஸ் பெக்