ஜெர்மனி: ம்யூனிக் நகரத் தாக்குதல்தாரியின் நண்பர் கைது

படத்தின் காப்புரிமை
Image caption ம்யூனிக் நகரத் தாக்குதல்தாரி. இவரது திட்டங்களை அறிந்திருக்கலாம் என்ற அடிப்படையில் 16 வயதான நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை ம்யூனிக் நகரில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட துப்பாக்கி தாக்குதல் தொடர்பாக 16 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாக ஜெர்மனி காவல்துறை தெரிவித்திருக்கிறது.

கைது செய்யப்பட்டிருக்கு பதின்ம வயது நபர் தாக்குதல்தாரியின் திட்டங்களை அறிந்திருந்திருக்கலாம் என்று சந்தேகப்படும் அவருடைய நண்பர் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ம்யூனிக் துப்பாக்கிதாரி டேவிட் அலி சன்போலி, ஓராண்டு காலமாக இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல்தாரி, முன்னதாக அதிகம் பேர் சுட்டு கொல்லப்பட்ட இடத்திற்கு சென்று புகைப்படங்களை எடுத்திருந்தார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இளையதளம் மூலம் வாங்கிய சட்டபூர்வமற்ற துப்பாக்கியை வைத்திருந்த அந்த 18 வயதான தாக்குதல்தாரி, தான் கொன்றவர்களை சீரற்ற முறையில் தேர்தெடுத்து சுட்டு கொன்றுள்ளார் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.