பாக்தாத்தில் தற்கொலை கார் குண்டு தாக்குதல்: 11 பேர் பலி

படத்தின் காப்புரிமை Reuters

இராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டு வெடிப்பில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த தாக்குதல்தாரி வெடிகுண்டு நிரப்பிய வாகனத்துடன் காலிஸ் நகரில் இருந்த சோதனை சாவடி ஒன்றின் மீது மோதினார்.

இந்த தாக்குதலில் இறந்தவர்களில் பலர் தங்களுடைய வாகனத்துடனே எரிந்து உயிரிழந்தார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.