வங்கதேசத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தில் தாக்குதல்; 9 பேர் பலி

படத்தின் காப்புரிமை epa
Image caption டாக்கா அருகிலுள்ள மறைவிடத்ததை தாக்கி இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் ஒன்பது பேரை கொன்றுள்ளதாக வங்கதேசக் காவல்துறை அறிவித்திருக்கிறது

வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவுக்கு அருகில் இருக்கும் ஒரு மறைவிடத்தின் மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் ஒன்பது பேரை கொன்றுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இன்னொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் எந்த குழுவை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை

ஜமாத்துல்-முஜாஹிதீன் இஸ்லாமியவாதக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என சந்தேகப்படும் பலரை காவல்துறை அண்மையில் கைது செய்திருக்கிறது.

20 பேர் கொல்லப்பட்ட, டாக்காவின் உயர்தர கபே ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்த குழுவின் ஈடுபாடு உள்ளதாக அரசு குற்றம் சுமத்தியிருக்கிறது,