சீனாவில் உள்ள திபெத்திய புத்த மத கல்விக்கழகம் இடிப்பு: சீன அதிகாரிகள் நடவடிக்கை

தெற்கு சீனாவில், உலகில் புத்த மதத்தைக் கற்பிக்கும் மிகப்பெரிய மையங்களில் ஒன்றான திபெத்திய புத்த மத கல்விக்கழகத்தின் ஒரு பகுதியை சீன அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.

தெற்கு சீனாவில் உள்ள் சிஷுவான் மாகாணத்தின் செர்தாரில் எடுத்த புகைப்படங்களின்படி, மலைப்பகுதியில் உள்ள புத்த பிக்குகள், பிக்குணிகள் மற்றும் மாணவர்கள் தங்கும் மலைப்பகுதி இல்லங்கள் உட்பட டஜன் கணக்கான கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

மற்ற சில கட்டங்கள் பாதிக்கப்படவில்லை..

உள்ளூர் அதிகாரிகள் அதிக கூட்ட நெரிசல் மற்றும் தீப்பிடிக்கும் ஆபத்தை குறைக்கும் வகையில் கட்டடத்தை புதுப்பித்து வருகின்றனர் என உள்ளூர் ஊடங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.ஆனால் ஆட்சியாளர்கள் மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.