பிரான்ஸ் தேவாலய தாக்குதல் - மதகுரு பலி

பிரான்ஸ் தேவாலய தாக்குதல் - மதகுரு பலி

வடக்கு பிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் பூசை நடந்துகொண்டிருந்த போது நுழைந்த இரு ஆயுதபாணிகள் ஆட்களை பணயமாக பிடித்து வைத்த சம்பவத்தில் எண்பத்து நான்கு வயதான கிறிஸ்தவ மதகுரு ஒருவர் கொல்லப்பட்டார்.

இன்னுமொருவர் உயிருக்காக போராடுகிறார்.

இரு தாக்குதலாளிகளையும் போலிஸார் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகின்றது.

கடந்த இரு வாரங்களில் 84 பேர் கொல்லப்பட்ட நிலையில் மிகவும் அதிகபட்ச உசார் நிலையில் இருக்கும் பிரான்ஸில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.