ஜப்பான் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் தாக்குதல்; 19 பேர் கொலை

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் மேற்கில் இருக்கும் சாகமிஹாரா நகரத்தில் உள்ள மாற்று திறனாளிகள் இல்லத்தில் நுழைந்த ஒருவர், கத்தியால் தாக்குதல் நடத்தி குறைந்தது 19 பேரை கொலை செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தாக்குதல் நடந்த மாற்றுத்திறனாளிகள் இல்லம்

20-க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த இல்லத்தில் வேலை செய்யும் 26 வயதான ஒருவர், தானே முன்வந்து காவல்துறையினரிடம் குற்றத்தை ஒப்பு கொண்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வுலகில் மாற்றுத் திறனாளிகளே இல்லாமல் இருக்க வேண்டுமென விரும்புவதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜப்பானில் பலர் கொல்லப்படுவது மிகவும் அரிதாக நடக்கின்ற குற்றமாகும்.

2001 மற்றும் 2008 கத்தி குத்து சம்பவங்களில் ஏழு மற்றும் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

1995 ஆம் ஆண்டு டோக்கியோ மெட்ரோ ரயிலில் அவும் ஷின்ரிக்யோ தனிமனித வழிபாட்டுக் குழுவினரால் நடத்தப்பட்ட சரின் வாயு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.