அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலரி கிளிண்டனுக்கு சான்டர்ஸ் ஆதரவு

படத்தின் காப்புரிமை AFP
Image caption அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட ஆதரவு தெரிவித்து பெர்னி சான்டர்ஸ், கட்சி மாநாட்டில் பேச்சு

ஹிலரிக்கு எதிராக போட்டியிட்டு தோற்றுபோன செனட் அவை உறுப்பினர் பெர்னி சான்டர்ஸ், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் அதிபர் வேட்பாளராக போட்டியிட ஹிலரி கிளிண்டனுக்கு பெரும் ஒப்புதல் அளித்து முன்மொழிந்துள்ளார்.

அமெரிக்காவின் மாற்றத்திற்கான போராட்டம் தொடரும் என்று நீண்ட உற்சாகத்தோடு வரவேற்கப்பட்ட சான்டர்ஸ் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் போலன்றி, நாட்டின் உண்மையான பிரச்சனைளை புரிந்து கொண்டு, செயல்படுவதற்கு தேவையான பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு சரியான தீர்வுகளை வழங்கியுள்ளதால், அடுத்த அதிபராக நிச்சயமாக ஹிலரி கிளிண்டன் வரவேண்டும் என்று அவர் பேசினார்.

முன்னதாக, ஹிலரி கிளிண்டன் அழுத்தங்களால் ஒருபோதும் சோர்ந்து போகமல் வெளியுறவு செயலராக பணிபுரிந்திருப்பதால், அமளி செய்த சான்டர்ஸின் ஆதரவாளர்கள் ஹிலரியை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்வதில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமென அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா வலியுறுத்தினார்.