உலகிலேயே உயரமானவர்கள் யார்?

டச்சு நாட்டு ஆண்களும், லாத்வியா நாட்டு பெண்களும் தான் உலகிலேயே உயரமானவர்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை

அதே சமயம், க்வாட்டமாலா நாட்டு பெண்களும், கிழக்கு தைமோர் நாட்டு ஆண்களும் தான் உலகிலேயே குள்ளமானவர்கள் என்று ஆய்வில் தெரிவந்துள்ளது.

மனிதர்களின் உயரங்களில், மரபியல் தாக்கங்களால் சில மாற்றங்கள் ஏற்படலாம் எனினும் நல்ல சத்தூட்டம், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது என லண்டன் இம்பிரியல் கல்லூரியின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கத்திய சமூகங்களில் மனிதர்கள் உயரமாக வளர்வது சராசரியாக உள்ளது. மேலும் ஆப்ரிக்காவின் சில இடங்களில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அவர்கள் கண்ட வளர்ச்சி குறைந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் உயரமானவர்களாக கருதப்படும் டச்சு நாட்டவரின் சராசரி உயரம் 183 செ.மீ மற்றும் லாத்விய பெண்களின் உயரம் 170 செ. மீ, உலகில் குள்ளமானவர்களாக கருதப்படும் க்வாட்டமாலா பெண்கள் 150 செ.மீட்டர் உயரத்தை எட்டுவது அரிது எனவும் மேலும் கிழக்கு தைமோர் ஆண்களின் சராசரி உயரம் 160 செ.மீட்டர் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.