அமெரிக்க முன்னாள் அதிபரை கொல்ல முயற்சித்த நபர் விடுதலை

முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனால்டு ரேகனை கொலை செய்ய முயற்சித்த மனிதர், 35 வருடங்களுக்கு பிறகு மனநல மருத்துவமனையிலிருந்து விடுதலையாகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹின்க்லி, ரேகனை கொலை செய்ய முயற்சித்தப் போது

1981 ஆம் ஆண்டு வாஷிங்டனில் ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே, ஹின்க்லி ஜூனியர் என்னும் அந்நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது ரீகன் மற்றும் மூன்று பேர் அதில் காயமடைந்தனர்.

மூவரில் ஒருவரான அதிபரின் செய்தித் துறை செயலர் ஜேம்ஸ் பிராடி மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு 2014 ஆம் ஆண்டு இந்தக் காயங்களால் உயிரிழந்தார்.

ஹின்க்லி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் தண்டிக்கப்படாமல் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரின் விடுதலைக்கு உத்தரவிட்ட நீதிபதி இனி ஹின்க்லியால் அவருக்கும் பிறருக்கும் பாதிப்புகள் ஏற்படாது என்றுதெரிவித்தார்.

ஹின்க்லி வர்ஜினியாவில் உள்ள அவரின் குடும்பத்தினரை 2006 ஆம் ஆண்டிலிருந்து சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.