துருக்கி : ஊடகங்கள் மீதான பிடி இறுகுகிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துருக்கி : ஊடகங்கள் மீதான பிடி இறுகுகிறது

இருவாரங்களுக்கு முன்னதாக தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து எதிரிகளை ஒடுக்கி வருகின்ற துருக்கிய அரசாங்கம், நூற்றி முப்பதுக்கும் அதிகமான தொடர்பு ஊடக நிறுவனங்களை மூடியுள்ளது.

தோல்வியில் முடிந்த சதியின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட, தடைசெய்யப்பட்ட மதகுருவான பெத்துல்லா குலனுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக பல பிரசுர நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மீது தொண்ணூறு, பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை இராணுவத்தை மீள்கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் ஒன்றுக்கு சற்று முன்னதாக இரு உயர் இராணுவ ஜெனரல்கள் இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

சதிப்புரட்சியின் பின்னர் கோபம் கொண்ட கூட்டம் ஒன்று நாட்டின் மிகவும் பழமையான நையாண்டி சஞ்சிகைகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

நாட்டின் பேச்சுச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது குறித்த தனது அச்சம் பற்றி அதன் ஆசிரியர் பிபிசியிடம் பேசினார்.