பாலூட்டுவதை தாய்மார்களே படம்பிடிக்க பிரசார இயக்கம்

படத்தின் காப்புரிமை Getty

குழந்தைகளுக்கு தாய் பாலூட்ட வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் ஐநா பிரசார முயற்சியின் ஒரு பகுதியாக தாய்மார்கள் தாங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை தாங்களே புகைப்படம் எடுக்க ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

77 மில்லியன் குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் தாய்ப்பாலுட்டப்படுவதில்லை என ஐநா குழந்தைகள் நிதியம் கண்டறிந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty

இதன் விளைவாக குழந்தைகளை நோய்களில் இருந்தும், இறப்பிலிருந்தும் பாதுகாக்கும் மிக முக்கிய ஊட்டசத்துக்கள் மற்றும் நுண்ணுயிர் கொல்லிகளை இந்த குழந்தைகள் தாய் பாலில் இருந்து பெறுவதை இழந்து விடுவதாக அந்த நிதியம் தெரிவிக்கிறது.

முதல் ஆறு மாதங்களில் குறைந்தது கொஞ்சமாவது தாய் பாலுட்டப்பட்ட குழந்தைகளைவிட, தாய் பாலுட்டப்படாத குழந்தைகள் நோய் தொற்றுகளால் இறப்பது ஏழு மடங்கு அதிகமாக சாத்தியக்கூறு இருப்பதாக யுனிசெப்-யின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.