காவலில் இருந்த சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம்: ஆஸ்திரேலிய நகரங்களில் பேரணிகள்

ஆஸ்திரேலியாவில், சிறுவர் சீர்திருத்த மையங்களில் வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் முறைகேடாக நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து, ஆஸ்திரேலிய நகரங்களில் கண்டனப் பேரணிகள் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் குழந்தைகளில் பலர் பழங்குடியினர் குழந்தைகள் ஆவர்.

படத்தின் காப்புரிமை ABC

மெல்பர்ன், சிட்னி, பிரிஸ்பேன் நகரங்களில் கூடியிருந்த போராட்டக்கார்கள், குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சிகளில் காண்பிக்கபட்ட காட்சிகள் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஒரு தடுப்புக் காவல் மையத்தில், ஒரு நாற்காலியில் பதின்ம வயது சிறுவன், துணியால் போர்த்தப்பட்டு கட்டிவைக்கப்பட்டிருந்தான்.

படத்தின் காப்புரிமை ABC

டான் டேல் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை ABC

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.