புருண்டியில் சர்வதேச காவல் படையை ஈடுபடுத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை அடக்க, புருண்டியில் சர்வதேச காவல் படையை ஈடுபடுத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை அடக்கும் முயற்சியாக, புருண்டியில் ஒரு சர்வதேச காவல் படையை ஈடுபடுத்துவதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஓராண்டு 228 காவல்துறை அதிகாரிகள் வரை அடங்கிய காவல் படைப்பிரிவு ஒன்றை அனுப்ப முன்மொழிந்து பிரான்ஸ் வழங்கிய வரைவை இந்த கவுன்சில் ஏற்றுகொண்டுள்ளது.

முன்னதாக, 50 அதிகாரிகளுக்கு மேலான காவல் படையை ஏற்றுகொள்ள போவதில்லை என்று புருண்டி தெரிவித்திருந்தது.

அங்கு 500-க்கு மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பலரும் சட்டத்திற்கு புறப்பாக கொல்லப்பட்டுள்ளதால், புருண்டி காவல் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

புருண்டி அதிபர் பியர்ரி நிகுருன்ஸிஸா, அவர் மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதை அறிவித்த, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அங்கு கலவரம் தொடங்கியது.