பிரிட்டன் எரிசக்தி துறையில் சீன முதலீடு: தெரீசா மே அதிருப்தி?

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஹிங்க்லே பாயின்ட் மின் உற்பத்தி நிலையம்

சீன முதலீடுகள் குறித்து டேவிட் கேமரனின் அணுகுமுறையில் பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மேவுக்கு உடன்பாடில்லை என பிரிட்டனின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் பங்களிப்புடன் புதிதாகக் கட்டப்பட இருந்த புதிய அணு உலை குறித்த முடிவை மறு ஆய்வு செய்ய இந்த வாரம் பிரிட்டன் அரசாங்கம் எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வின்ஸ் கேபிள், ஹிங்லே பாயிண்ட் மின் உற்பத்தி நிலையம் குறித்து புதிய பிரதமர் முன்னர் ஏற்கனவே பல ஆட்சேபணைகளை எழுப்பியதை நினைவுகூர்ந்தார்.

கடந்த காலங்களில், பிரிட்டனின் எரிசக்தி தொழிலில் முதலீடு செய்ய சீனாவை அனுமதிக்கும் முடிவு குறித்து பலரும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.