மண்டேலா பெயரில் மக்கள் ஆதரவு கோரும் தென்னாப்பிரிக்க எதிர்க்கட்சி

தென் ஆஃப்ரிக்காவில் உள்ள பிரதான எதிர்கட்சியான ஜனநாயக கூட்டணி, மாற்றுக் கட்சித் தலைவராக இருந்த மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலா பெயரைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்கிறது.

மறைந்த முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலா ஜனநாயக கூட்டணியின் எதிரியான ஆஃப்ரிக்கா தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கூட்டணியின் தலைவர் ம்யூஸி மைமன் புதன்கிழமை நடைபெற உள்ள நகராட்சி தேர்தலுக்குமுன், தன் கட்சி சார்பாக நடத்திய இறுதி பேரணியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜனநாயக கூட்டணியின் தலைவர் ம்யூஸி மைமன்

வாக்குப்பதிவுக்கு முன்னதாகவே, தென் ஆஃப்ரிக்காவில் அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்க துவங்கிவிட்டன.

இத்தேர்தல், ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய சோதனையாக பார்க்கப்படுகிறது.

மண்டேலாவின் பெயரை பயன்படுத்தியதற்காக ஜனநாயக கூட்டணியினரை பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.