போலந்தில் போப் பிரான்சிஸ் நிறைவேற்றிய பூசை

தனது ஐந்து நாட்கள் வருகையின் ஒரு பகுதியாக க்ராகோவில் உள்ள இரண்டாம் ஜான் பால் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் நிறைவேற்றிய பூசையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அவர் இறை இரக்க தேவாலயத்தில் பூசைக்கு தலைமை தாங்கினார்.

படத்தின் காப்புரிமை Reuters

அவர் உலக இளைஞர் தினத்தில் பங்கேற்கிறார். இது உலக அளவில் இளம் கத்தோலிக்கர்களுக்காக நடத்தப்படும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.

மேலும் போலந்தில் கிறிஸ்தவ மதம் தழுவப்பட்ட 1,050வது ஆண்டை குறிக்கும் விதத்தில் அவரது பங்கேற்பு இருந்தது.