ஆர்மீனியா தலைநகரில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்றம் அதிகரிப்பு

படத்தின் காப்புரிமை androlepsy

ஆர்மீனியாவில் போலிஸ் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தலைநகர் எரிவனில் மீண்டும் ஒரு பேரணி ஒன்றை நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராகி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று, நகரில் நடைபெற்ற சமீபத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

முன்னர், போலிஸ் அதிகாரி ஒருவர், குறிவைத்து சுடும் துப்பாக்கி மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters

இருவாரங்களுக்குமுன், காவல் நிலையம் ஒன்றை ஆயுத குழுவினர் கைப்பற்றியதை தொடர்ந்து அரசியல் நெருக்கடி நிலை தொடங்கியது.

இறுதியாக மிச்சமிருந்த பணய கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இரு மருத்துவ பணியாளர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தில் உள்ள ஊழல் மற்றும் மோசம் அடைந்து வரும் பொருளாதார நிலைமை ஆகியவை குறித்து எதிர்ப்பாளர்களின் விரக்தியை பல ஆர்மினியப் பொதுமக்களும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.