பிரான்ஸ்: கொல்லப்பட்ட பாதிரியாரின் நினைவு வழிபாட்டில் முஸ்லீம்களும் பங்கேற்பு

படத்தின் காப்புரிமை .
Image caption கொல்லப்பட்ட பாதிரியார் நினைவாக நடத்தப்பட்ட ரூவேங் பேராலய வழிபாட்டில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களும் பங்கேற்பு

பிரான்சில், இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்ட உள்ளூர் பாதிரியாரின் கொலை நடந்து ஐந்து நாட்களுக்கு பின்னர், மக்கள் நிறைந்திருந்த ரூவேங் பேராலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் ரோமன் கத்தோலிக்கர்களுடன் நூற்றுக்கு அதிகமான முஸ்லீம்களும் பங்கேற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இத்தகைய கொடூரத் தாக்குதலை முஸ்லீம்கள் ஏற்கவில்லை என்பதை காட்டும் வகையில், இந்த வழிபாட்டில் பங்கேற்க ஆலயங்கள் முஸ்லீம்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

பிரான்ஸை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜிகாதிகளின் தாக்குதல்களில் மிகவும் சமீபத்திய தாக்குதலான இதனை முஸ்லீம்கள் ஏற்கவில்லை என்பதை காட்டும் விதமாக இந்த வழிபாட்டில் பங்கேற்க பிரான்ஸ் முழுவதுமுள்ள முஸ்லீம்களை தேவாலயங்கள் அழைத்திருந்தன.

படத்தின் காப்புரிமை AP

86 வயதான பாதிரியார் ஷாக் ஹமால் அவருடைய ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்.