பிரிட்டனில் சீன முதலீடு பற்றிய தேவையற்ற குற்றச்சாட்டைப் பொறுக்க முடியாது - சீனா

படத்தின் காப்புரிமை Getty

பிரிட்டனில் அணு உலை ஒன்றை கட்டியமைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து, பிரிட்டனில் செய்யப்படும் சீனாவின் முதலீடுகளை பற்றிய விரும்பத்தகாத குற்றச்சாட்டுக்களை நாடு பொறுத்து கொள்ளப் போவதில்லை என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆதாரமற்ற அச்சங்களால், "உறவுகளின் பொற்காலம்" என்று அது குறிப்பிட்டுள்ள விஷயம் குலைக்கப்பட்டும் ஆபத்து இருப்பதாக ஷிங்குவா செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை

இந்த பணித்திட்டத்தில் சீனா ஆற்றும் பங்கில், பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மே பாதுகாப்பு பற்றிய கவனங்கள் கொண்டிருப்பதாக வெளியான அறிக்கைகளுக்கு மத்தியில், ஹிங்க்லீ பாயின்டில் உள்ள பல பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் ஒத்திப் போடப்படுவது கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.