சிரியாவில் ரஷிய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது: 5 பேர் பலி

படத்தின் காப்புரிமை Reuters

சிரியாவில் உதவிப் பணியில் ஈடுபட்டிருந்த தனது ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு, அதில் பயணம் செய்த ஐந்து பேரும் கொல்லப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்திருக்கிறது.

அலெப்போ நகருக்கு உதவிகளை வழங்கிய பிறகு, இத்லீப் மாகாணத்தின் மேற்பரப்பில் வைத்து இந்த ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

மனிதநேய சேவையில் ஈடுபட்ட அந்த ஹெலிகாப்டரில் இருந்தோர் அனைவரும் வீர மரணம் அடைந்துள்ளதாக கிரெம்ளின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு யாரும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters

இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களும், காணொளிகளும் ஹெலிகாப்டரின் எரிகின்ற பாகங்களையும், பல உடல்களையும காட்டுகின்றன.

இறந்த ஒருவரின் உடல் மிதித்து நசுக்கப்படுவதை ஒரு காணொளி காட்டுகிறது.