சீனாவில் பிரபல வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டு கால இடைநிறுத்தி வைக்கப்பட்ட சிறை

சீனாவில் உள்ள ஒரு நீதிமன்றம், ஒரு ஆண்டிற்கு மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த பிரபலமான வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுக்களில் முதல் குழுவுக்கு தண்டனை வழங்கியது.

ஷாய் யான்மின் என்பவர் பணம் கொடுத்து போராட்டங்களை ஒருங்கிணைத்த குற்றத்தை புரிந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை AFP

அவருக்கு மூன்று ஆண்டு கால இடை நிறுத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

சீன அதிகாரிகள், எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வேலைகளை ஒடுக்கி வருகிறது.

இதில் ஷாய் மற்றும் அவரோடு பணிபுரிபவர்களின் நிறுவனமும் அடங்கும். தற்போது இந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption வாங் யு

அந்த நிறுவனத்தை சேர்ந்த வாங் யு என்பவர் காணொளியில் தோன்றி தான் வேலையை துறப்பதாக அறிவிக்கப்பட்ட பின், திங்களன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.