பெய்ஜிங் உச்சநீதிமன்றம்:தென் சீனக் கடலில் சீனாவின் பகுதியில் மீன் பிடித்தால் சிறை

தென் சீனா கடலில், சீனா தனது பகுதி என்று கூறிக்கொள்ளும் பகுதியில் யாராவது சட்டத்திற்கு புறம்பாக மீன் பிடித்தால் அவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பெய்ஜிங்கில் உள்ள உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Xinhua
Image caption தென் சீனா கடல்

சீனா தனது பகுதி என்று சொல்லும் பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் நபர்கள் கடுமையான குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடலின் பெரும்பான்மையான பகுதியில் சீனா வரலாற்று பூர்வமாக சொந்தம் கொண்டாடமுடியாது என்று கடந்த மாதம் தி ஹேக்கில் உள்ள சர்வதேச தீர்ப்பாயம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீனாவின் இந்த முடிவு வந்துள்ளது.

கடந்த காலத்தில் சீன அதிகாரிகளால் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டனர்.