சைபிரியாவில் ஆந்த்ராக்ஸ் பரவல் , 2500 மான்கள் இறப்பு

கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக, சைபிரியாவில் ஆந்த்ராக்ஸ் பரவி வருவதாக ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image caption ஆந்த்ராக்ஸ்

ஒரு குழந்தை இறந்துவிட்டதாகவும், யமலோ-நெனெட்ஸ் பகுதியில் வாழும் டஜன் கணக்கான கால்நடை மேய்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Maxim Lomakin

கிட்டத்தட்ட 2,500 மான்கள் இறந்துவிட்டன. ஆந்த்ராக்ஸ் ரஷ்யாவில் ''சைபிரியன் பிளேக்'' என்று கூறப்படுகிறது. கடைசியாக 1941ல் ஆர்டிக் வட்டத்தில் அது காணப்பட்டது.

அசாதாரணமான அளவில் நிலவிய அதிக வெப்பநிலையால் அடர்ந்த பனிக்கட்டிகள் உருகிவிட்டன என நம்பப்படுகிறது. இதனால், மறைந்திருந்த பயன்பாட்டில் இல்லாத மயானங்கள் வெளியே தெரிகின்றன. மற்றும் குடிநீரில் விதைகளை வெளியிட்டுள்ளன.

சைபீரிய ஆளுநர் பேசுகையில் அந்த பகுதி இருந்து எல்லோரும் வெளியேற்றப்பட்டனர், உயிரோடு இருக்கும் மான்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.