சிரியாவில் ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்த்தப்பட்ட இடம் அருகே விஷ வாயு பீப்பாய் வீச்சு

திங்களன்று ரஷியாவின் ராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர் கிளர்ச்சியாளராகளால் சுட்டுவீழத்தப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு நகரத்தில் விஷ வாயு பீப்பாய்கள் வீசப்பட்டுள்ளன என்று சிரியாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சுட்டுவீழத்தப்பட்ட ரஷியாவின் ராணு ஹெலிகாப்டர்

இட்லிப் மாகாணத்தில் உள்ள சாரேகப் என்ற நகரத்தில் மருத்துவர் ஒருவர் பி பி சியிடம் பேசுகையில், திங்களன்று ஒரு ஹெலிகாப்டர் குளோரின் நிறைந்த இரண்டு பீப்பாய்களை நகரத்தின் மையத்தில் வீசிவிட்டுச் சென்றது என்றார்.

அது கிளோரின் என்று மக்களுக்கு தெரியும் ஏனென்றால் அவர்கள் கடந்த காலத்தில் இது போல விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட டஜன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது வரை யாரும் இறந்ததாக செய்திகள் வெளியாகவில்லை.