எத்தியோப்பிய அரசுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள்

வரும் வார இறுதியில், அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தக்கோரி எத்தியோப்பியாவின் மிக பெரிய இன குழுவான ஒரோமோஸ் அழைப்பு விடுத்துள்ளது.

அதிகாரிகளால் நடத்தப்படும் தொடர் கொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்று அவர்கள் விவரிக்கும் விவகாரங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் ஹேல்மரியம் டீசலேங், அண்டை நாடுகளைப் போல எத்தியோப்பியாவும் இன மோதல்களை நோக்கி சரிந்து வருகிறது என்று எச்சரித்தார்.

எத்தியோப்பியாவில் இரண்டாவது பெரிய இன குழுவான அம்ஹாரவைச் சேர்ந்த மக்கள் கடந்த ஞாயிற்று கிழமையன்று வடக்கு கொண்டர் நகரத்தில் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.