போகோ ஹராமின் புதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு, தங்களுடன் ஒட்டி இயங்கும் பிரிவான மேற்கு ஆப்ரிக்க அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் புதிய தலைவரை அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption போகோ ஹராமின்வெளியிட்டுள்ள வீடியோவில் அபு முசாப் அல்-பர்னாவி

நைஜிரியாவை மையமாக கொண்டு இயங்கும் இஸ்லாமியவாதிகளின் சார்பாக பேச்சாளாராக முன்பு செயல்பட்ட யின் முதல் பேட்டி, ஐஎஸ் அமைப்பு வெளியிடும் இதழின் சமீபத்திய பதிப்பில் வெளியாகியுள்ளது.

போகோ ஹராம் குழுவின் முன்னாள் தலைவரான அபூபக்கர் ஷேகாவுக்கு என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.

கடைசியாக கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில்தான் உறுதி செய்யப்பட்டவகையில் அவர் பொது வெளியில் தோன்றினார் .