தெற்கு சூடானில் ஆறு அமைச்சர்கள் பதவி நீக்கம்

தெற்கு சூடானின் அதிபர் சல்வா கிர், தனது நீண்ட கால எதிராளியான ரெய்க் மச்சரோடு கூட்டாக இருந்ததற்காக ஆறு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

அவர்களுக்கு பதிலாக மச்சரின் கட்சியில் இருந்து விலகி தனி அணியாக மாறியுள்ள எஸ்.பி.எல்.எம்.ஐ.ஓ.(SPLM-IO) என்ற கட்சியை சேர்ந்தவர்களை பதவியில் அமர்த்தியுள்ளார்.

முக்கிய பதவிகளான உள்துறை மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் உள்ளிட்ட பதவிகள் இதில் அடங்கும்.

இந்த நடவடிக்கை மேலும் கிர் மற்றும் மச்சாரின் இடையே நிலவும் பதற்றத்தை அதிகரிக்கும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர் .

கடந்த மூன்று வாரங்களாக அவர்களின் படையினர் மீண்டும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் மேலும் 60,000 மக்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்திருக்கிறது என்றும், மனித நேயப் பேரழிவை ஏற்படுத்தும் நிலைக்கு இது நாட்டை தள்ளுகிறது என்றும் ஐ.நா.கூறியுள்ளது.