சிரியாவில் அலெப்போ நகர் அருகே கடும் சண்டை

சிரியாவின் அலெப்போ நகரை சுற்றியுள்ள பகுதியில், அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தீவிர மோதல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையினர்

சிரிய மனித உரிமைகள் அவதான அமைப்பு, உஸ்பெக் மற்றும் ஃபதே-அல்-ஷாம் முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சிப் படையினர், தங்கள் அணியினர் பகுதியை முற்றுகையிட்டுள்ள அரசுப் படைகளின் அரணை முறியடிக்க எதிரணி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்ட பல இடங்களை சிரிய ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது என்று அது கூறியுள்ளது. வான்வழி தாக்குதலில், அரசுப் படைகளுக்கு ரஷியா உதவி வருகிறது.