ஹமாஸ் குழுவினருக்கு கிருத்துவ தொண்டு நிறுவனம் பண உதவி: இஸ்ரேல் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Reuters

பாலத்தீன இஸ்லாமியவாதக் குழுவான ஹமாஸ் மற்றும் அதன் ராணுவப் பிரிவிற்கு காசாவில் உள்ள முக்கிய சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று, பல மில்லியன் டாலர்கள் வெளிநாட்டு நிதியை திசைதிருப்பி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

முகமது எல் ஹபாபி , வோர்ல்ட் விஷன் என்ற கிருத்துவ தொண்டு நிறுவனம் காசா நிலப்பரப்புக்கு அனுப்பிய நிதியில் , ஆண்டிற்கு ஏழு மில்லியன் டாலர்கள் அல்லது ஒட்டு மொத்த நிதியில் 60 சதவீதம் நிதியை காசாவில் உள்ள ஹமாஸ் குழுவிற்கு அனுப்பியதாக இஸ்ரேலிய உள்துறை பாதுகாப்பு சேவை நிறுவனமான ஷின் பெட் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஹபாபி கைது செய்யப்பட்டார்.

காசாவில் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்த முறையான தணிக்கைகளை வேர்ல்ட் விஷன் நிறுவனம் செய்து வருவதாக கூறியுள்ளது.

மேலும், இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று கருத ஒரு காரணமும் கூட இல்லை எனவும் அது தெரிவித்துள்ளது.