இரானில் தீவிரவாத குழுவின் 20 பேருக்கு தூக்கு

இரானில் சுன்னி முஸ்லீம் தீவிரவாத குழுவை சேர்ந்த 20 சந்தேக நபர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

தூக்கிலிடப்பட்ட அந்த சிறை கைதிகள் தான் மேற்கு இரானில் நடத்த தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பின் போது நடந்த 20 கொலைகளுக்கும் காரணம் என்று அரசு வழக்கறிஞர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

அந்த கைதிகள் தவ்ஹித் மற்றும் ஜிகாத் தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்றும் 2009-ல் இரண்டு சுன்னி மத தலைவர்களை கொலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான மாமுஸ்தா முகமது ஷேக் அல் இஸ்லாம் என்பவர் நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் இரானின் சக்திவாய்ந்த நிபுணர்களின் அமைப்பில் இடம் பெற்றிருந்தவர்.