ஜப்பானில் குழந்தைகள் மீது பெருமளவு துஷ்பிரயோகம்

ஜப்பானில் மிக அதிக அளவில் குழந்தைகள் மீது துஷ்ப்ரயோகம் நடந்துள்ளது என்று ஜப்பான் அரசாங்கத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption கோப்புப்படம்

கடந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மீதான துஷ்ப்ரயோக வழக்குகளை கையாண்டதாகவும் இது அதற்கு முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பாதி வழக்குகள் குழந்தைகள் மீது உளவியல் துஷ்பிரயோகங்கள் செலுத்தபட்ட வழக்குகள் என்றும் பல குழந்தைகள் தங்களது வீட்டில் குடும்பத்தினர்களுக்குள் நடந்த வன்முறை சம்பவங்களை நேரில் பார்த்துள்ளதும் அடங்கும்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption கோப்புப்படம்

கடந்த ஆண்டு துஷ்பிரயோகம் குறித்து தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் புகார்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது .

ஜப்பானிய காவல் துறை அதிகாரிகள் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் பற்றிய சந்தேக வழக்குகளை அதிகமாக விசாரித்து வருவதால் தான் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.