பிலிப்பைன்ஸ் சிறைகளில் துஷ்பிரயோகம் நடப்பதாக புகார்

கைதிகளால் நிரம்பி வழியும் பிலிப்பைன்ஸ் சிறைகளில் நடக்கும் துஷ்பிரயோக புகார்கள் குறித்து புதிய அதிபர் ரொட்ரிகோ ட்யூடெர்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிலிபைன்ஸ் நாட்டில் வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ ட்யூடெர்த்

சிறையில் சரியான உடைகள் இல்லாமல், அழுக்கடைந்த காரை படிக்கட்டுகளில் சிறைவாசிகள் தூங்க கட்டாயப்படுத்தப்படுவதாக ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் வெளியிட்டுள்ள பிரத்யேக படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் வணிகத்தை முற்றிலும் ஒழிப்பதாக சபதம் செய்து, ரொட்ரிகோ ட்யூடெர்த் ஆட்சிக்கு வந்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் அவர் அதிபராகப் பதவியேற்ற பிறகு, இதுவரை 400க்கும் மேற்பட்ட போதை மருந்து கடத்தல் சந்தேக நபர்கள் எந்தவித விசாரணைகளும் இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.