தெற்கு சூடான்: பெரும் மனிதநேய அவலம்

தெற்கு சூடான்: பெரும் மனிதநேய அவலம்

தெற்கு சூடானில் அண்மைய ஐந்து நாட்களில் நடந்த சண்டைகளில் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், சொத்துச் சேதம் போன்றவை பெருமளவு நடந்துள்ளதாக ஐநாவின் புலனாய்வு ஒன்று கூறுகின்றது.

அரசாங்க படைகளும், எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய ஆயுதந்தரித்த இளைஞர்களும் இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டதாக ஐநா கூறுகின்றது.

ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக இடம்பெயரச் செய்யப்பட்டனர்.

அதிபர் சல்வா கீருக்கு ஆதரவான படைகளுக்கும் பதவி விலக்கப்பட்ட துணை அதிபர் ரெய்க் மச்சாருக்கு ஆதரவான குழுவுக்கும் இடையிலான மோதல்களே இதற்கு காரணம்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.