ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் வலது சாரி தீவிரவாதி என நம்பப்படும் ஒருவர் கைது

ஆஸ்திரேலியா நகரமான மெல்போர்னில்,வலது சாரி தீவிரவாதி என நம்பப்படும் ஒரு 31 வயது நபரை பயங்கரவாத எதிர்ப்பு போலிசார் கைது செய்துள்ளனர். இவர் குடியேற்றத்திற்கு எதிரான அமைப்பான ''ஆஸ்திரேலியாவை மீட்டெடுப்போம்''(Reclaim Australia) என்ற குழுவோடு தொடர்ப்பு உடையவராவார்.

படத்தின் காப்புரிமை AFP Getty Images
Image caption ஆஸ்திரேலியாவை மீட்டெடுப்போம்''(Reclaim Australia) என்ற குழுவை சேர்ந்தவர்களின் சமீபத்திய போராட்டம்

காவல் துறையினர் ,பிலிப் காலியா என்ற அந்த நபர் வடக்கு மெல்போர்னில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளை தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

சமுதாய உறுப்பினர்களுக்கு தீங்கு விளைவிக்க பரிந்துரை செய்வதில் தனிநபர்கள் ஈடுபட்டுள்ளதாக தங்களுக்கு வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

கைது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த இடத்தில் அதிகமான அளவில் காவல் துறையினரின் இருந்ததாக தெரிவித்தனர்.