தென்னாப்பிரிக்கா: உள்ளூர் தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு

படத்தின் காப்புரிமை MUJAHID SAFODIEN AFP Getty Images

தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் தேர்தல்களில், தலைநகரான பிரிட்டோரியா உள்பட்ட நகராட்சியில் ஜனநாயகக் கூட்டணியானது, ஆளும் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சியை தோற்கடித்துள்ளது.

சுவானே நகராட்சியில் நடந்த தேர்தலின் இறுதி முடிவுகள் 41 சதவீதம் பெற்றிருக்கும் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸோடு ஒப்பிடுகையில் ஜனநாயகக் கூட்டணி 43 சதவீதம் பெற்றிருப்பதை காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty

இந்த இடத்தில் தன்னுடைய கட்டுப்பாட்டை பாதுகாத்து கொள்ள ஜனநாயகக் கூட்டணி பிற கட்சியோடு கூட்டணி அமைப்பது அவசியமாகும்.

இறுதி முடிவுகள் ஜிஎம்டி நேரப்படி பிற்பகல் நான்கு மணிக்கு வெளியாக உள்ளது.

நாட்டின் மிக பெரிய நகரான ஜோகனஸ்பர்க்கிலும் இரு முக்கிய கட்சிகளும் மிக கடுமையான , நெருங்கிய போட்டியை சந்தித்திருக்கின்றன.

நிறப்பாகுபாடு முடிவுற்ற காலத்திற்கு பிறகு ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் மிக மோசமான தேர்தல் முடிவுகள் இது தான்.