அமெரிக்கப் பிரதிநிதிகளின் அவை தலைவராக பால் ரயனுக்கு டிரம்ப் ஆதரவு

படத்தின் காப்புரிமை AFP EPA

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கட்சியின் தலைமையோடு இருந்த உறவுகளில் ஏற்பட்டிருந்த நெருடல்களை சரி செய்யும் வகையில், பிரதிநிதிகளின் அவை தலைவராக பால் ரயனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், ரயன் இன்னும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட ஏற்றவராக இல்லை என்று கூறி டிரம்ப் ஆதரவு மறுத்திருந்தார்.

படத்தின் காப்புரிமை AP

இந்த சொற்களை தான் கடைசியில் டிரம்பை முதலில் ஆதரிக்க மறுத்து பின்னர் ஆதரிப்பதற்கு முன்னர் ரியனும் பயன்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்கான்சினில் நடைபெற்ற பரப்புரை நிகழ்வில் வெற்றிக்காக இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரிய போவதாகவும், முரண்பட்டால் நண்பர்களாக தான் முரண்படுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

ஜான்மெக்கேயினையும், கெல்லி அயோட்டையும் குடியரசு கட்சி செனட் அவை உறுப்பினர்கள் ஆக்குவதற்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.